News April 17, 2024

டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

image

மோகனப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி கங்கம்மா (43). இவர்கள் கடந்த 7ஆம் தேதி அகரம் அருகே டூவீலரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கங்கம்மா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை பெங்களூரு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில்  சிசிச்சைப்  பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 19, 2025

அரசு போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

image

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் திங்கள்(ஏப்.21) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 19, 2025

தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது

image

கெலமங்கலம் அடுத்த கோவிந்தபள்ளியை சேர்ந்தவர் சரவணன் மனைவி அம்பிகா. தற்காலிக சத்துணவு சமையலராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி, தன் கணவர் சக்திவேலுவுக்கும், அம்பிகாவிற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அஸ்வினி, கோவிந்தப்பள்ளி பகுதியில் வைத்து அம்பிகாவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் அஸ்வினியை கைது செய்தனர்.

error: Content is protected !!