News October 20, 2025
நடிகர் பாலமுருகன் காலமானார்.. குவியும் இரங்கல்

இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட சி.பாலமுருகன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக உடுமலைப்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 2007-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘முதல் கனவே’ படத்தில் விக்ராந்த், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘குண்டக்க மண்டக்க’ படத்திற்கு வசனம் எழுதியதோடு நடித்தும் உள்ளார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News October 20, 2025
அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) என்றால் என்ன?

‘AWS’ அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் தளமாகும். நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தங்களது இணையதளங்கள், செயலிகள், தரவு சேமிப்பு மற்றும் கணினி செயல்பாடுகளை இயக்குவதற்கு தேவையான அனைத்து கருவிகளையும் வாடகைக்கு வழங்கும் ஒரு Server இது. இது உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் கிளவுட் சேவைகளில் ஒன்று. Netflix, Canva <<18057185>> உள்ளிட்ட பல முக்கிய செயலிகள்<<>> இதை பயன்படுத்துகின்றன.
News October 20, 2025
ரத்து.. தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் அதிர்ச்சி

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், சிலவற்றில் பயணிகளின் வரத்து குறைந்ததால் அவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல் – கோட்டயம், கோட்டயம் – சென்ட்ரல், நெல்லை – செங்கல்பட்டு, செங்கல்பட்டு – நெல்லை, நாகர்கோவில் – சென்ட்ரல், சென்ட்ரல் – நாகர்கோவில் ஆகிய 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊர் திரும்புவோருக்கு ஷேர் பண்ணுங்க.
News October 20, 2025
மோடியின் தீபாவளி கிளிக்ஸ்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS விக்ராந்த் போர்க்கப்பலில், PM மோடி தீபாவளியை கொண்டாடினார். கப்பற்படை வீரர்களுக்கு மத்தியில் பேசிய அவர், நக்சல் பயங்கரவாதத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்றார். நக்சல் பயங்கரவாதத்தை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வரும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், போர் வீரர்களுடன் PM மோடி கொண்டாடிய தீபாவளி போட்டோஸை swipe செய்து பாருங்கள்.