News October 20, 2025
நீலகிரி: வீட்டு பணியாளர் நல வாரிய சேர்க்கை

தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு 20 வகையான தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன. இந்நிலையில் ஊட்டியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வரும் அக்.22 ஆம் தேதி வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறுகிறது.
Similar News
News March 12, 2026
ஊட்டி: பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு!

ஊட்டி அப்பர்பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று முன்தினம் இரவு 3 பேர் மது அருந்திவிட்டு, வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். வாக்குவாதம் தகராறாக மாறியதால், அங்கு வந்த ஊட்டி மத்திய போலீஸ் நிலைய காவலர் பிரபு இளைஞர்களிடம் அமைதியாக செல்லும்படி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரபுவை பீர் பாட்டிலால் தாக்கினர். இதையடுத்து நிஷாந்த், அகமதுல்லா, டேனிஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
News March 12, 2026
குன்னூர் அருகே விபத்து!

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திரு விஷ்ணுகுமார் (20). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டிற்கு வந்து நேற்று டூவீலரில் கோவை திரும்பும் வேலையில் குன்னூர் அருகே சென்ற போது விபத்தில் சிக்கினார். உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 12, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (11.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


