News October 20, 2025
புதுச்சேரிக்கு பொது விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு வருகின்ற அக்.21ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக நவ.15 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
Similar News
News March 12, 2026
புதுச்சேரி: பாதுகாப்பு குறைபாடு – நடவடிக்கை எடுக்க பரிந்துரை

புதுச்சேரி ஆளுநர் தற்காலிகமாக தங்கியிருக்கும் மாளிகைக்குள், கடந்த 9ஆம் தேதி நள்ளிரவு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மதுபோதையில் அத்துமீறி நுழைந்துள்ளார். இது சம்பந்தமாக பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த ஆயுதப்படை காவலரை பணிநீக்கம் செய்யவும், அவருடன் பணியில் இருந்த 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யவும் டி.ஜி.பி ஷாலினி சிங்குக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்துள்ளார்.
News March 12, 2026
புதுச்சேரி: எரிபொருள் குறித்து ஆட்சியர் ஆலோசனை

புதுச்சேரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோக நிலைமை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம்-ஒழுங்கு), கூடுதல் மாவட்ட ஆட்சியர், அரசு துறை அதிகாரிகள், பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலைய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News March 12, 2026
புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம்

ஜார்கண்டைச் சேர்ந்த இளைஞர், புதிய ஆளுநர் மாளிகையில் நுழைந்து விருந்தினர் அறைக்குள் சென்று படுத்து உறங்கிய விவகாரத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் வசந்தராஜாவை, டிஸ்மிஸ் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமைக் காவலர் ஆனந்தவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


