News October 20, 2025

தீபாவளிக்கு மட்டுமே திறக்கும் கோயில் தெரியுமா?

image

நாட்டில் விசித்திரமான கோயில்களுக்கு பஞ்சமே இல்லை. அப்படியான ஒரு கோயில், கர்நாடகாவின் ஹாசன் நகரில் உள்ள ஹாசனம்பா துர்கா தேவி கோயில். இக்கோயில் தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. 10 நாள்களுக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆனால், 7 நாள்களுக்கு மட்டுமே மக்கள் துர்கையை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நேரத்தில் தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவது மிகவும் நல்லது என நம்பப்படுகிறது.

Similar News

News October 20, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

image

உங்களது மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நிராகரிப்புக்கான காரணம் குறித்து போனுக்கு மெசேஜ் அனுப்பப்படும். அந்த காரணம் ஏற்புடையதல்ல என நீங்கள் எண்ணினால், மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். அந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானவர்கள் இணைந்து கொள்ளலாம். புதிய பயனர்களுக்கு டிச.15-ல் ₹1,000 வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2025

தேவதைகளின் தீபாவளி கொண்டாட்டம்

image

தீபாவளி பண்டிகையையொட்டி திரையுலக நட்சத்திரங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர். கிளாஸியாகவும், மாடர்னாகவும் ஆடை அணிந்து எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர். புகைப்படங்களை SWIPE செய்து பார்த்து யாருடைய தீபாவளி லுக் நல்லா இருக்குனு கமெண்ட் பண்ணுங்க..

News October 20, 2025

₹66 கோடி வசூலித்த ‘டியூட்’

image

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ உலகளவில் மூன்றே நாள்களில் ₹66 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும், தீபாவளி விடுமுறை காரணமாக வசூல் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதே நிலை நீடித்தால் ‘டியூட்’ ₹100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க ‘டியூட்’ பார்த்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?

error: Content is protected !!