News October 20, 2025
மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்து

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வாழ்த்து பதிவில், மக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் திருநாளை கொண்டாட வேண்டுமெனவும், பட்டாசு வெடிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. “For People Service” என்ற கோஷத்துடன் வாழ்த்து வெளியிடப்பட்டது.
Similar News
News March 4, 2026
ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலையில் பயங்கர விபத்து!

வி.சி மோட்டூர் பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலையில் இன்று(மார்ச் 4) கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி ஏழுமலை, சாந்தகுமார், ரமேஷ், இக்பால் ஆகிய 4 பேர் மயங்கி விழுந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News March 4, 2026
ராணிப்பேட்டை: டிகிரி முடித்தால் ரூ.58,514 சம்பளம்!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News March 4, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

ராணிப்பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா நடைபெறவுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ராணிப்பேட்டை நேரிலோ அல்லது ranipetdsto@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சந்திர கலா தெரிவித்துள்ளார்.


