News October 20, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் ஒருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் பலேப்பள்ளி அடுத்த எலத்தகிரியை சேர்ந்த மார்டின் என்பவர் நேற்றிரவு கந்திகுப்பம் அடுத்த ராயப்பனூர் பகுதியில் தனது ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த கந்திகுப்பம் போலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 15, 2026
கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
விண்ணபிக்க <
அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 15, 2026
‘அதிமுகவை பாஜக விழுங்கிவிடும்’ : உதயநிதி அதிரடி பேச்சு!

கிருஷ்ணகிரியில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுகவை பாஜக விழுங்கிவிடும்” என விமர்சித்தார். மேலும், நிர்வாகிகள் மக்களிடம் கண்ணியமாகப் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, பர்கூர் அருகே ஒப்பதவாடி கிராமத்தில் 100 அடி உயரக் கொடிக்கம்பத்தை அவர் நேற்று திறந்து வைத்து உரையாற்றினார்.
News March 15, 2026
கிருஷ்ணகிரியில் சோகம்: ரயில்வே ஊழியர் பரிதாப பலி

கிருஷ்ணகிரி நகரில் இரயில்வே காலனியை சேர்ந்த குப்புசாமி என்பவர் மார்ச்-2 அன்று ரவுண்டான சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


