News October 20, 2025
FLASH: இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் உயர்வு

தீபாவளி நாளில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 317 புள்ளிகள் உயர்ந்து 84,269 புள்ளிகளிலும், நிஃப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 25,824 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக Asian Paints, ITC, Bharti Airtel, M&M உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 23, 2026
BREAKING: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் தலைமை அலுவலத்தில் EPS, பியூஷ் கோயல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 23, 2026
BREAKING: தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹7,600 குறைந்தது

ஜெட் வேகத்தில் உயர்ந்துவந்த தங்கம் விலை, தற்போது ராக்கெட் வேகத்தில் குறைந்து வருகிறது. அந்த வகையில், 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹5,360 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ₹2,240 சரிந்துள்ளது. தற்போது சென்னையில் 1 கிராம் ₹12,670-க்கும் 1 சவரன் ₹1,01,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், சுமார் 3 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் ₹1 லட்சத்தை நெருங்கியுள்ளது.
News March 23, 2026
மூத்த தலைவர் தத்தா மேகே காலமானார்

காங்கிரஸ், பாஜகவில் முக்கியத் தலைவராக விளங்கிய தத்தா மேகே(89) காலமானார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவர், காங்கிரஸ் சார்பில் நாக்பூரில் போட்டியிட்டு 4 முறை லோக் சபா MP ஆகியுள்ளார். மேலும், 1999-ல் தேசியவாத காங்கிரஸ் அங்கு ஆட்சியமைத்தபோது, இவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த தத்தாவின் மறைவுக்கு நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


