News October 20, 2025

சிவகங்கை: மழை வெள்ளம் பாதிப்புகள்.. புகார் எண்கள்!

image

சிவகங்கையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 20, 2025

சிவகங்கை மக்களே இனி அலைச்சல் இல்லை

image

சிவகங்கை மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!

News October 20, 2025

சிங்கம்புணரி அருகே ரூ.1.60 லட்சம் வழிப்பறி

image

மதுரைரை சேர்ந்த ஓட்டுநர் தங்கபாண்டி. இவர் கடலை மிட்டாய் கம்பெனி வேனில் வசூலுக்கு சென்று, மதுரை நோக்கி சென்றார். எஸ்.எஸ்., கோட்டை அருகே டூவீலரில் வந்த மர்ம நபர்கள், வேன் கதவு திறந்து இருப்பதாக கூறினர். இதை நம்பி, வேன் டிரைவரும், உதவியாளரும் இறங்கி பார்த்தனர். அப்போது வண்டியில் இருந்த ரூ.1.60 லடசத்தை வழிப்பறி செய்து தப்பினர். எஸ்.எஸ்., கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 20, 2025

காரைக்குடி மக்கள் கவனத்திற்கு

image

சென்னையிலிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10:30 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையம் வந்து சேரும். பயணிகளை பல இடங்களுக்கு ஏற்றி செல்வதற்காக 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரண்டு பஸ்கள்கள் இயக்கப்பட நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தற்சமயம் 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடி ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!