News October 20, 2025

போரை நிறுத்துவதாக மீண்டும் அறிவித்த இஸ்ரேல்

image

டிரப்பின் பேச்சை கேட்டு அக்.10-ல் காஸா போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் முன்வந்தன. ஆனால் இதனை மீறி ரஃபாவில் இஸ்ரேல் படையை ஹமாஸ் நேற்று தாக்கியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், பதிலுக்கு வான்வழி தாக்குதலை நிகழ்த்தியது. இதில் காஸாவினர் 97 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், போரை மீண்டும் நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அப்பாவி மக்களை கொன்றதால் இஸ்ரேலுக்கு உலக மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News October 20, 2025

முதல்முறை முதலீட்டாளர்களே.. முகூர்த்த நேரம் குறிச்சாச்சு

image

பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளீர்களா? தீபாவளியை ஒட்டி, முகூர்த்த நேரத்தில் தொடங்கினால், உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், பொருளாதார வளர்ச்சியும் காணலாம். இதன்படி, நாளை மதியம் 1:45 PM – 2:45 PM என்ற முகூர்த்த நேரத்தில், பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டை தொடங்குங்கள். அதேநேரம், அக்.22 பங்குச்சந்தை விடுமுறை, அக்.23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை ஓபன் ஆகும்.

News October 20, 2025

FLASH: இந்தாண்டு ₹7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை

image

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு ₹1,000 கோடி கூடுதலாக, அதாவது ₹7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசுகள் வணிக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த தீபாவளி சிவகாசி மக்களுக்கு உண்மையிலேயே சரவெடிதான்..

News October 20, 2025

இவர்களுக்கு மாதம் ₹1,000 கிடைக்கும்.. அரசு திட்டம்

image

காசநோயாளிகளுக்கு மாதா மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். https://nikshay.in/Home/Index -ல் விண்ணப்பிக்கலாம். அனைவரும் பயனடைய SHARE பண்ணுங்க.

error: Content is protected !!