News October 20, 2025

புதுகை: வெளுத்து வாங்க போகும் மழை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுகை, நாகை, தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வரும் அக்.20 (இன்று), அக்.21 (செவ்வாய்க்கிழமை), அக்.22 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 17, 2026

புதுக்கோட்டை: மெடிக்கல் செல்வோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 17, 2026

புதுகை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த கலெக்டர்

image

புதுகை மாவட்டத்தில் வெயில் கடுமையாக உள்ளதால் வேப்ப அலை தாக்கும் சூழ்நிலை உள்ளது. ஆகவே பொதுமக்கள், பருத்தி ஆடைகள், கூலிங் கிளாஸ், தொப்பி, ORS கரைசல், வெளியே செல்லும் பொழுது பாட்டில்களில் குடிநீர், ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் மதியம் 12 மணி முதல், 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் தேநீர் காப்பி மற்றும் கார்பனேட் பானங்களை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 17, 2026

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட புதுக்கோட்டை கலெக்டர்

image

புதுகை மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலின் போது காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, படைப்பணி சான்றுடன், முன்னாள் படை வீரர் இயக்குனர் அலுவலகத்தை அனுகுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04322-236593 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!