News October 20, 2025

மயிலாடுதுறை: வெளுத்து வாங்க போகும் மழை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வரும் அக்.20 (இன்று), அக்.21 (செவ்வாய்க்கிழமை), அக்.22 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

மயிலாடுதுறை: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

image

காவல்துறையிலிருந்து அழைப்பதாகவும், உங்கள் பெயரில் உள்ள பார்சல் கைப்பற்றப்பட்டு அதில் போதை பொருள் இருப்பதாக வரும் போலி அழைப்புகளை நம்பி மக்கள் பீதி அடைய வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் உடனடியாக புகார் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

News March 13, 2026

மயிலாடுதுறை: பைக் வாங்க விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு, இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில், மானிய தொகை ரூ.25,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 13.3.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

error: Content is protected !!