News October 20, 2025

திருப்புவனம் நகரில் நீர் புகும் அச்சம்

image

திருப்புவனம்: நகரை ஒட்டிய நீர் வரத்து கால்வாய்களில் மணல் திருட்டு அதிகரித்ததால் கரைகள் பலவீனமடைந்துள்ளன. வடகிழக்கு மழையால் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படவுள்ள நிலையில், பிரமனூர் கால்வாய் வழியாக அதிவேகமாக நீர் பாயும் அபாயம் நிலவுகிறது. இதனால் வண்டல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர் நகரில் புகும் அச்சம் எழுந்துள்ளது. மணல் திருட்டை தடுத்து கரைகள் சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News March 11, 2026

சிவகங்கை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

சிவகங்கை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in<<>> என்ற தளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க

News March 11, 2026

சிவகங்கை: Spam Calls தொல்லையா? இனி END CARD!

image

சிவகங்கை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News March 11, 2026

மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கலாவதி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.03.2026 அன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர் /பகிர்மானம் / மானாமதுரை கோட்டத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மின்வாரியம் சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!