News October 20, 2025
BREAKING: தேர்தல் கூட்டணி.. விஜய் எடுத்த புதிய முடிவு

2026 தேர்தலில் TVK-வுக்கான ஆதரவு, யாருடன் கூட்டணி என்பது குறித்து சர்வே நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதில், வாக்காளர்களின் மனநிலை, சாதி செல்வாக்கு, இளைஞர்களின் ஆதரவு, அரசியல் கட்சிகளின் தற்போதைய பிம்பம் ஆகிய முக்கிய விஷயங்கள் இடம்பெறவுள்ளன. 1 மாதத்திற்குள் இதனை முடித்துவிட்டு கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளாராம். ADMK-TVK கூட்டணி அமைய உள்ளதாக பேசப்பட்ட நிலையில், இந்த புதிய முடிவை எடுத்துள்ளார்.
Similar News
News October 20, 2025
ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சி திருநாள்: கமல்

தீபாவளியை ஒட்டி அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகரும், MP-யுமான கமல்ஹாசன். அவரது எக்ஸ் பதிவில், ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித் திருநாள்; வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப் பெருநாள்; தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக; தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News October 20, 2025
மூச்சு பிரச்சனை: குழந்தைகள் கிட்ட இத கவனிங்க முதல்ல!

குழந்தைகளுக்கு ஏதேனும் மூச்சு பிரச்சனை இருந்தால் அவர்களால் கூற முடியாது. அதை நாம் தான் கவனிக்க வேண்டும். அப்படி கண்டறிய பயன்படும் சில அறிகுறிகள்: * வழக்கத்தை விட விரைவாக மூச்சு விடுவது *மூச்சு விடும்போது மார்பு சுருங்குதல் *முனகுதல் அல்லது சத்தத்துடன் சுவாசித்தல் *உதடு, நாக்கு, நகம் நிறம் மாறுவது. *அசாதாரண தூக்கம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை முக்கியம் என்பதே டாக்டர்களின் அட்வைஸ்.
News October 20, 2025
அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் பட வில்லன்

அஜித்குமாருடன் நடிக்க ஆசைப்படுவதாக வித்யூத் ஜம்வால் தெரிவித்துள்ளார். ‘பில்லா 2’ படத்திலேயே தன்னை அஜித் பாராட்டியதாகவும், அப்போது, தான் 2-ம் கட்ட நடிகர் தான் என்றும் நெகிழ்ந்துள்ளார். மேலும், அஜித் ஒரு சிறந்த மனிதர் என்றும் புகழ்ந்துள்ளார். ‘பில்லா 2’ படத்தில் திம்த்ரி என்ற ரோலில் நடித்த வித்யூத், ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். ‘மதராஸி’-யில் ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தார்.