News October 20, 2025
தீபாவளிக்கு ஆட்டுக்கால் பாய செய்ய ரெடியா?

முதலில் சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கருவேப்பிலை, வெங்காயம் இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த தேங்காயை சேர்ந்து, வேக வைத்த ஆட்டுக்காலை தண்ணீரோடு ஊற்றி கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கினால் பாய ரெடி.
Similar News
News October 20, 2025
அக்.22-ல் பால் விநியோகத்தை நிறுத்தி வேலைநிறுத்தம்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹15 உயர்த்த கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இது நடக்காததால், அக்.22-ல் தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் கூட்டுறவு ஒன்றியம் & தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி அறிவித்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News October 20, 2025
தமிழக மீனவர்களுக்காக பாஜக நிற்கும்: நிர்மலா சீதாராமன்

PM மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தமிழக மீனவர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். கடலில் சிக்கித் தவிக்கும் குமரி வல்லவிளையை சேர்ந்த மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தமிழக மீனவர்களின் நலனுக்காக பாஜக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 20, 2025
Mass-ஆக தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி!

எப்படா வருவாரு என காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். ஆண்டுதோறும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன்பு, ரசிகர்கள் திரண்டு தீபாவளி வாழ்த்து பெற்று செல்வார்கள். இந்த ஆண்டும் காலை முதலே அவரது வீட்டு வாசலில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. வெயிட்டிங்கில் இருந்த ரசிகர்கள் முன் Mass-ஆக வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறினார்.