News October 20, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபாவளி தினத்தில் அனுமதிக்கப்பட்ட ( காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை) நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்கலாம். பட்டாசு கடைக்காரர்கள் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
நீலகிரி: வீட்டு பணியாளர் நல வாரிய சேர்க்கை

தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு 20 வகையான தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன. இந்நிலையில் ஊட்டியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வரும் அக்.22 ஆம் தேதி வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறுகிறது.
News October 20, 2025
குன்னூர் மலை ரயில் ரத்து!

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை உலக பாரம்பரிய முதல் பெற்றது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நாள்தோறும் பெய்தாலும் கனமழையால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரன்னிமேடு ஹில்குரோவ் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் தண்டவாளத்தின் மீது மண் சரிந்தது. இதை அகற்றும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்ற வருவதால் இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
News October 20, 2025
தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம்

நீலகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் விடிய, விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், காய்ந்து கிடந்த தேயிலை தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மழைக்கு நடுவே, வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது. போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.