News April 17, 2024

63 வாக்குறுதிகளை தந்த வேலூர் எம்பி வேட்பாளர்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நேற்று (ஏப்ரல் 16) தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் வேலூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 63 வாக்குறுதிகளை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 7, 2025

வேலூர்: துக்க வீட்டில் தகராறு.. 2 வாலிபர் கைது!

image

வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் மணி (32). அதே பகுதியை சேர்ந்த ரவுடி பழனி (38) இவர்கள் நேற்று டிச.6 சுருட்டுக்கார தெரு, துக்க வீட்டில் மாலை போட சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மாற்றி தாக்கி கொண்டனர். இதுகுறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 7, 2025

வேலூர்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

image

வேலூர், மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலம் எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு-94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News December 7, 2025

வேலூர்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan -வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW

error: Content is protected !!