News October 20, 2025

சென்னை: இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (19.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*

Similar News

News March 4, 2026

சென்னையில் ரயில் பெட்டி கண்காட்சி

image

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை (ஐசிஎஃப்) வளாகத்தில் மார்ச் 12 முதல் 14 வரை மூன்று நாட்கள் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 125 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ரயில் பெட்டி தயாரிப்பு தொழில்நுட்பம், புதிய மாதிரிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

News March 4, 2026

சென்னை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1) சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044–25342441, 2)தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, 3) Toll Free 1800 4252 441, 4) சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, 5) உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. *மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க*

News March 4, 2026

தண்டையார்பேட்டை: மின் பெட்டியை மூட கோரிக்கை

image

தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில், மின் பெட்டி திறந்த நிலையில் உள்ளது. திறந்த நிலை மின் பெட்டிக்கு அருகில், தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள்‌, அம்மா உணவகம் மற்றும் ATM-கள் உள்ளன. இச்சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் & இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அசம்பாவிதம் நிகழும் முன், மின் பெட்டியை மூட கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!