News April 17, 2024
கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

மக்களைத் தேர்தல் 2024 ஏப்.19 இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏப்ரல் 19 அன்று கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாக காய்,கனி, மலர், உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News January 24, 2026
சென்னையில் போக்குவரத்து மாற்றம்

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 26ம் தேதியான அன்று காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. கௌடியாமடம் ரோடு, ராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம். SHARE
News January 24, 2026
சென்னையில் இனி குடிநீர் பிரச்னைக்கு ஈஸியான தீர்வு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை எளிதில் பதிவு செய்ய “சென்னை குடிநீர்” (Chennai Metro Water) கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு அல்லது கழிவுநீர் கசிவு குறித்த புகார்களை உடனுக்குடன் தெரிவிக்க முடியும். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News January 24, 2026
சென்னையில் தலையில் கல்லைப்போட்டு கொலை

பெரும்பாக்கம், எழில்நகர் எஸ்.பிளாக்கை சேர்ந்த கார்த்திக் (25) பூங்காவில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், குமார்(27), விஜயகுமார்(28), சரத் என்ற சரத்குமார்(35), சரண்ராஜ்(29), மற்றொரு கார்த்திக்(26) ஆகியோர் பார்க்கில் குடிபோதையில் சண்டையிட்டு தலையில் கல்லைத்தூக்கி போட்டு கொலை செய்தது கொலை செய்தது தெரியவந்தது. மது அருந்த பணம் கொடுக்காததால் இந்த கொடூரம் அரங்கேற்றியுள்ளது.


