News October 19, 2025
பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் இத்தனை கோடியா?

‘கோமாளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தின் மாபெரும் வெற்றியால் பாக்ஸ் ஆபிஸ் இயக்குநரானார். ₹5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ₹100 கோடி வசூலை குவித்தது. இப்படத்திற்காக முதலில் ₹70 லட்சம் சம்பளம் வாங்கிய பிரதீப், மெகாஹிட்டால் கூடுதலாக ₹80 லட்சம் பெற்றுள்ளார். டிராகன், LIK ஆகிய இரு படங்களுக்கும் சேர்த்து ₹17 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
Similar News
News March 4, 2026
தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரிப்பு: ரவிக்குமார் MP

சாதி ரீதியான மோதல்களை தடுப்பதில் காவல்துறை மெத்தனமாக இருக்கக் கூடாது என ரவிக்குமார் MP தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், இதற்கு பாஜக போன்ற மதவாத சக்திகள் வலுப்பெற்றதே காரணம் என குற்றஞ்சாட்டினார். மேலும், சாதிய வன்கொடுமைகளை தடுக்க நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளை முழுமையாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
News March 4, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 627 ▶குறள்:
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
▶பொருள்: துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.
News March 4, 2026
CINEMA 360°: ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு சூர்யா ரெடி

*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீஸர் மார்ச் 5-ல் ரிலீசாகிறது *’வித் லவ் படம்’ மார்ச் 6 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகும் என அறிவிப்பு *மறைந்த இயக்குநர் சங்கையாவின் மகளின் கல்வி நிதிக்கு யோகி பாபு ₹1 லட்சம் வழங்கியுள்ளார் *அஜித்குமாரின் அண்ணன் அணில் குமார் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் *வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திற்கு மாதம் 10 நாள்கள் கால்ஷீட் தர சூர்யா ஒப்புக்கொண்டதாக தகவல்


