News October 19, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (19.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 20, 2025
கோவை: ஒப்பணக்கார வீதியில் பொதுமக்கள் கூட்டம்

தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடைசி நாள் என்பதால், கோவை ஒப்பணக்கார வீதியில், துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம், அலை மோதி வருகிறது. மேலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டு வருவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 19, 2025
கோவையில் ஜாலியாகச் செல்ல சூப்பர் ஸ்பாட்!

தீபாவளிக்குவிடுமுறை கிடைத்துள்ள நிலையில் கோவை மக்கள் ஜாலியாக சுற்றுலா செல்ல 5 சூப்பரான ஸ்பாட்கள் பார்க்கலாம்.மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள வால்பாறை, மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பரளிக்காடு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள கோத்தகிரி, சிருவாணி மலைப்பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் அருவி,மருதமலை முருகன் கோவில்; வேறு ஏதேனும் சூப்பர் ஸ்பாட் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க
News October 19, 2025
முடக்கப்பட்ட கணக்கிலிருந்து பணம் எடுக்க சிறப்பு முகாம்.

இந்தியன் வங்கியின் கோவை மண்டல அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக எவ்விதமான பரிவர்த்தனைகளும் செய்யாத வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள பணத்தை எடுக்க அந்தந்த வங்கி கிளைகளில் கேஒய்சி புதிதாக கொடுத்து பணத்தை எடுத்துக்கொள்ள அக். முதல் டிச.2025 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள அதில் அறுவறுத்தப்பட்டுள்ளது.