News October 19, 2025
பண மழை கொட்டும் 5 ராசிகள்

குரு பகவன் அதிசார நிலையில், நேற்று (அக்.18) கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால், 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *மிதுனம்: நிதி ஆதாயம் பெருகும். *சிம்மம்: வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். *கன்னி: தொழிலில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். தொட்டதெல்லாம் வெற்றியடையலாம். *துலாம்: வேலையில் சம்பள உயர்வு, வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். *விருச்சிகம்: நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
Similar News
News October 20, 2025
விரைவில் வரும் சீமானின் தண்ணீர் மாநாடு

சீமான் ஏற்கெனவே ஆடு, மாடு மாநாடு மற்றும் மலைகளின் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். அடுத்ததாக தூத்துக்குடியில் கடல் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்த சீமான், கடலில் அப்பகுதி மக்களுடன் சென்று ஆய்வு நடத்தினார். இந்நிலையில், தஞ்சையில் நவ.15-ம் தேதி தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். கல்லணை அருகே உள்ள பூதலூர் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 20, ஐப்பசி 3 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News October 20, 2025
ஸ்மிரிதி மந்தனாவுக்கு விரைவில் டும் டும் டும்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும், நட்சத்திர வீராங்கனையாகவும் கலக்குபவர் ஸ்மிரிதி மந்தனா. அவருக்கும் இந்தூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். ‘ஸ்மிரிதி மந்தனா விரைவில் இந்தூர் மருமகளாக இருக்கிறார். இவ்வளவுதான் சொல்ல முடியும். நான் உங்களுக்கு தலைப்புச் செய்தி கொடுத்துவிட்டேன்’ என பேட்டி ஒன்றில் பலாஷ் கூறியுள்ளார்.