News October 19, 2025
மெக்காலே கல்வி முறையை விட வேண்டும்: மோகன் பகவத்

இந்தியர்களாகிய நாம் மெக்காலே கல்வி முறையில் தான் கற்றோம் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இதிலிருந்து விடுபட்டால் மட்டுமே, நமது மரபை புரிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார். 1835-ல் அறிமுகமான மெக்காலே கல்விமுறை, ஆங்கிலத்தை இந்தியாவில் திணித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முன்புவரை சமஸ்கிருதம் (அ) அரபிக்கில் உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கல்வி கற்று வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News October 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 20, ஐப்பசி 3 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News October 20, 2025
ஸ்மிரிதி மந்தனாவுக்கு விரைவில் டும் டும் டும்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும், நட்சத்திர வீராங்கனையாகவும் கலக்குபவர் ஸ்மிரிதி மந்தனா. அவருக்கும் இந்தூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். ‘ஸ்மிரிதி மந்தனா விரைவில் இந்தூர் மருமகளாக இருக்கிறார். இவ்வளவுதான் சொல்ல முடியும். நான் உங்களுக்கு தலைப்புச் செய்தி கொடுத்துவிட்டேன்’ என பேட்டி ஒன்றில் பலாஷ் கூறியுள்ளார்.
News October 20, 2025
மாரி உலகத்தை விட்டு வெளிவர முடியவில்லை: லிங்குசாமி

மாரி செல்வராஜின் ‘பைசன்’ படத்தை பார்த்து இயக்குநர் லிங்குசாமி வெகுவாக பாராட்டியுள்ளார். ‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு மாரியின் உலகத்தை விட்டு தன்னால் வெளிவர முடியவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். துருவ் விக்ரம், பசுபதி, லால் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அற்புதமாக எழுதப்பட்டு இருந்ததாகவும், நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்துக்கு உயிரூட்டியுள்ளதாகவும் அவர் சிலாகித்துள்ளார்.