News October 19, 2025

பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய வசதி

image

இறந்தவர்களின் பெயர்களை பட்டாவில் இருந்து நீக்குவதற்கும், புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்கவும், அண்மையில் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் A TN nilam citizen portal மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். SHARE IT.

Similar News

News October 20, 2025

Sports Roundup: பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெள்ளி

image

*ஜூனியர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தான்வி சர்மா வெள்ளி வென்றார். *புரோ கபடியில் யு மும்பா டை பிரேக்கரில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தியது. *மகளிர் உலகக் கோப்பையில், அரையிறுதிக்கு 3-வது அணியாக இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. *ஆசிய யூத் கேம்ஸ், 70 கிலோ குராஷ் தற்காப்பு கலையில் இந்தியாவின் குஷி வெண்கலம் வென்றார்.

News October 20, 2025

அட்லீ ஒரு ‘King of Masala’: ரன்வீர் சிங்

image

‘மெர்சல்’ படம் பார்த்த பிறகு, ‘நீங்கள் மும்பைக்கு வந்தால், நாம் இருவரும் இணைந்து மாஸான படத்தை கொடுக்கலாம்’ என்று அட்லீக்கு மெசேஜ் அனுப்பியதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். அட்லீ இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படத்தில் ரன்வீரின் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இந்த பட செட்டுக்கு சென்ற ரன்வீர், ‘King of Masala’ என்று அட்லீயை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

News October 20, 2025

BREAKING: அறிவித்தார் பிரதமர் மோடி

image

உள்நாட்டில் தயாரித்த பொருள்களை வாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என பொதுமக்களை PM மோடி வலியுறுத்தியுள்ளார். தீபாவளிக்கு தாங்கள் வாங்கிய சுதேசி பொருள்களுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து, அதை SM-ல் பகிருமாறு PM அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த தீபாவளி பண்டிகைக்கு 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பையும், படைப்பாற்றலையும் கொண்டாடுவோம் என்றும் PM தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!