News October 19, 2025
நாகை: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

நாகை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News March 11, 2026
நாகை: லாரியில் அடிபட்டு காவலர் உயிரிழப்பு

நாகை மாவட்டம் செம்போடை கிராமத்தைச சேர்ந்தவர் காவலர் விநாயகம். இவர் வேதாரண்யம் அருகே வானவன்மகாதேவி பிரதான சாலையில் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு செல்லும் போது எதிரே வந்த லாரியில் அடிபட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
News March 11, 2026
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
நாகை: மாதம் ரூ.6,000 வேண்டுமா?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <


