News October 19, 2025

தென்காசி: கட்டட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி

image

செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று செங்கோட்டையில் உள்ள வீட்டில் கட்டுமான பொருட்கள் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் இடிபாடுகளில் சிக்கினார். இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த செங்கோட்டை தீயணைப்பு மீட்பு படையினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News October 20, 2025

தென்காசி: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

image

தென்காசி மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 20, 2025

தென்காசி: தீபாவளி மகிழ்ச்சி தொடரும் எண்கள் இதோ!

image

தென்காசி மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலைய எண்கள் (தென்காசி 04633222166, ஆலங்குளம் 04633272101, சங்கரன்கோவில் 04636222509, செங்கோட்டை 04633233200, சுரண்டை 04633261699, கடையநல்லூர் 04633240301, வாசுதேவநல்லூர் 04634241238) மகிழ்ச்சியான தீபாவளிக்கு இந்த எண்கள் முக்கியம். SHARE பண்ணுங்க..!

News October 19, 2025

தென்காசியில் தொடர் மழை; குண்டாறு அணை நிரம்பியது

image

தென்காசி மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக தென்காசியில் 99 மி.மீ., ஆய்க்குடியில் 96 மி.மீ., செங்கோட்டையில் 96 மி.மீ., குண்டாறு அணைப்பகுதியில் 88 மி.மீ., சிவகிரியில் 75 மி.மீ., ராமநதியில் 86 மி.மீ., மழை பதிவானது. 36 அடி உயரமுள்ள செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறியது.

error: Content is protected !!