News October 19, 2025
தீபாவளியே கொண்டாடாத தமிழக கிராமம்!

நாளை இந்தியா முழுவதும் பட்டாசு சத்தமும், மகிழ்ச்சியும் சிரிப்பலையும் நிறைந்திருக்கும். ஆனால், சிவகங்கையின் மாம்பட்டி கிராமத்தில் 1954-ம் ஆண்டு முதல் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. வறுமையால் கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள், தீபாவளிக்கும் கடன் வாங்கி, வறுமையில் சிக்கியுள்ளனர். இதிலிருந்து மீள, தீபாவளியை கொண்டாடாமல், பொங்கலை சிறப்பாக கொண்டாடலாம் என முடிவு செய்ய, அந்த வழக்கம் இன்றுவரை தொடருகிறது.
Similar News
News October 19, 2025
தீபாவளிக்கு எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றுவது?

தீபாவளி அன்று நிறைய விளக்குகளை ஏற்றி, அவற்றின் ஒளி மூலம் இறைவனை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதன்படி எந்த எண்ணெயில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று தெரியுமா? பசு நெய்யில் விளக்கு ஏற்றினால் வீட்டில் செல்வம் சேரும், நல்லெண்ணெய் பயன்படுத்தினால் எல்லா வித பீடைகளும் விலகும், விளக்கு எண்ணெய் பயன்படுத்தினால் தாம்பத்ய சுகம் கிடைக்குமாம். இதில் குறிப்பாக கடலை எண்ணெயில் தீபம் ஏற்றவே கூடாது.
News October 19, 2025
தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

இப்போது ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை, பின்னர் 30 முதல் 35% வரை குறையும் என்கிறார் முதலீட்டு நிபுணர் அமித் கோயல். வரலாற்றில் 2 முறை மட்டுமே தங்கம் விலை இம்மாதிரி உச்சம் தொட்டதாகவும். அதன்பின் பெரும் சரிவு கண்டதாகவும் கூறும் அவர், இம்முறையும் உச்சம் தொட்டு, பின் 1 சவரன் ₹62,161 வரையும், வெள்ளி 1 கிலோ ₹77,450 வரையும் குறையும் எனக் கணித்துள்ளார். ஆகவே தங்கம் வாங்க அவசரப்பட வேண்டாம் என்கிறார்.
News October 19, 2025
Recipe: தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

சுக்கு, மிளகு, திப்பிலி, சதகுப்பை, சிறுநாகப்பூ, வாய்விடங்கம், கருஞ்சீரகம், சீரகம், லவங்கப்பட்டை, கோரைக் கிழங்கு, மல்லி, சித்தரத்தை, ஓமம், அதிமதுரம், கிராம்பு (தலா 50 gm) ஆகியவற்றை வறுத்து, அரைக்கவும். பின் வாணலியில் வடிக்கட்டிய வெல்லப் பாகினை ஊற்றி, கம்பி பதம் வந்தவுடன் அந்த கலவையை கொட்டி கைவிடாமல் கிளறவும். அதை இறக்கி வைத்து, சூடு ஆறிய பின் நெய் & தேன் விட்டுக் கிளறினால் தீபாவளி லேகியம் ரெடி.