News October 19, 2025
47 முறை ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: காஸா ஊடகம்

போர்நிறுத்த ஒப்பந்தத்தை, இஸ்ரேல் 47 முறை மீறியதாக காஸா ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 143 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அனைத்து பிணைக்கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும் வரை, காஸாவுக்கு உதவி பொருள்களை எடுத்து செல்லும் முக்கிய வழியான ரஃபா எல்லை திறக்கப்படாது என்று இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Similar News
News October 19, 2025
தீபாவளியில் விஜய் சோக முடிவு

கடந்த தீபாவளியன்று ஒரு நாளுக்கு முன்பே தமிழக மக்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், கரூர் துயரத்தால் இந்த முறை தற்போதுவரை விஜய் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும், தவெக சார்பில் தீபாவளி கொண்டாட்டங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். சோகத்தில் ஆழ்ந்துள்ள விஜய், தீபாவளிக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டு வருகிறார்.
News October 19, 2025
குழந்தைகளுக்கு இந்த வயதில் காது குத்துறீங்களா? உஷார்!

குழந்தை பிறந்து குறைந்தது 1 வருடம் கடந்த பிறகுதான் அவர்களுக்கு காது குத்த வேண்டும். இல்லையெனில், புண், தொற்று ஏற்படுவதில் இருந்து நரம்புகள் கூட பாதிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். அத்துடன், காது குத்தும்போது குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். காய்ச்சல், சளி இருந்தால் கூட காது குத்த வேண்டாம். காது குத்தி 6 வாரங்கள் ஆகும் வரை வேறு காதணியை மாற்ற வேண்டாம். பல குழந்தைகளை காக்க SHARE THIS.
News October 19, 2025
கேரக்டர் ரோல்களில் கலக்கும் சரத்குமார்..!

1980, 90-களில் கிராமத்து நாயகனாக அறியப்பட்டவர் சரத்குமார். ஆனால், அவரது சினிமா வாழ்க்கை 2000-க்கு பிறகு சரிந்தது. அரசியலில் நுழைந்த அவர், கட்சியையும் பாஜகவில் இணைத்துவிட்டார். இந்நிலையில், PS, போர்தொழில், 3BHK, டியூட் ஆகிய படங்களில் வித்தியாசமான ரோல்களில் கலக்கி வருகிறார். இதனால் சரத்குமார், சினிமாவில் 2.0-வை துவக்கிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு பிடித்த சரத்குமார் படம் எது?