News October 19, 2025
நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்!

நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் மூன்று நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு: ஊட்டி123, குந்தா 49, கெத்தை 56, கிண்ணகோரை 41, பாலகோலா 39, குன்னூர் 95, பார்லியார் 93, எடப்பள்ளி 113, கோத்தகிரி 52, கோடநாடு 56, பந்தலூர் 74, கூடலூர் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Similar News
News March 13, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (12.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News March 13, 2026
உதகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்

உதகை ஏடிசி திடலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், செயலாளர் பாமா ரமேஷ் முன்னிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை புழக்கத்தைத் தடுக்கத் தவறிய மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
News March 12, 2026
நீலகிரி: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <


