News October 19, 2025
கல்யாணம் வேண்டாம்.. Kens ஆண்கள் மட்டும் போதும்!

சீனாவில் தற்போது, இதுதான் டிரெண்டிங்காக உள்ளது. வாழ்வில் Commitments வேண்டாம், ஆனால் பார்ட்னர் மட்டும் வேண்டும் என்று முடிவெடுக்கும் பெண்கள், Kens என்ற ஆண்களை தங்களுடன் வைத்து கொள்கிறார்கள். இந்த Kens ஆண்கள் முற்றிலும் Professional. ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேச மாட்டார்கள். வீட்டு வேலையில் தொடங்கி அனைத்திற்கும் உதவியாக இருப்பார்கள் என்பதால், பெண்கள் மத்தியில் டிமாண்ட் அதிகரித்துள்ளது.
Similar News
News October 19, 2025
தீபாவளி குறித்து அகிலேஷ் யாதவ் சர்ச்சை கருத்து

கிறிஸ்துமஸின் போது உலகின் பல நகரங்கள் மின்விளக்குகளால் ஒளிர்கின்றன, ஆனால் தீபாவளியன்று நாம் ஏன் அகல் விளக்குகளுக்காக இவ்வளவு செலவழிக்க வேண்டும் என்ற அகிலேஷ் யாதவ்வின் கேள்வி சர்ச்சையானது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பன்சால், வாடிகனில் சென்று அகிலேஷ் கிறிஸ்துமஸை கொண்டாடட்டும், அங்காவது அவருக்கு 2-4 வாக்குகள் கிடைக்கக்கூடும் என்று சாடியுள்ளார்.
News October 19, 2025
JEE மெயின் 2026 தேர்வு அறிவிப்பு வெளியானது

2026-ம் ஆண்டுக்கான JEE மெயின் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. முதல்கட்ட தேர்வுக்கு இம்மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வானது ஜனவரி 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News October 19, 2025
ஒரே நாளில் உயரமாகி, மீண்டும் குள்ளமாவீங்க!

நீங்கள் ஒரே நாளில் உயரமாகவும், குள்ளமாகவும் ஆகுறீங்க என சொன்னால் நம்பமுடிகிறதா? நாள் முழுக்க, உட்கார்ந்தோ / நடந்துகொண்டோ இருக்கும்போது புவியீர்ப்பு விசையால் உங்கள் முதுகெலும்புக்கு இடையில் இருக்கும் Cartilages சுருங்குகிறது. ஆனால் இரவில் தூங்கும்போது உங்கள் முதுகெலும்பு Rest-ல் இருப்பதால், Catilage-கள் விரிவடைகிறது. இதனால், காலையில் எழும்போது 1 CM உயரமாவீர்கள் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.