News October 19, 2025

நலன் காக்கும் ஸ்டாலின் முகாமில் 18,244 பேர் பயன்

image

நேற்று (அக்.18) மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்ததாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. முதற்கட்டமாக 10 முகாம்கள் நடந்துள்ளது. 17 உயர் சிகிச்சை பிரிவு டாக்டர்கள் மருத்துவ சேவை அளித்து வருகின்றனர். 5,430 ஆண்,12,814 பெண் என மொத்தம் 18,244 பேர் பயனடைதுள்ளனர். பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும் என்றார். 

Similar News

News October 19, 2025

குமரியில் முன்னாள் அமைச்சர் உட்பட 25 பேர் மீது வழக்கு

image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே குறும்பனை பஸ் நிலையத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்குவதாக காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டது. அதில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருமுனை பிரச்சாரம் செய்ததாகவும், காவல்துறை கலைந்து போக கூறியும் போகாததால் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உட்பட 25 பேர் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News October 19, 2025

குமரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

குமரி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News October 19, 2025

குமரியில் சூரிய உதயம் தெரியவில்லை

image

சுற்றுலா மயமான கன்னியாகுமரிக்கு இன்று விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கன்னியாகுமரியில் மழை பெய்து கொண்டிருந்ததால் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே கடற்கரைக்கு வந்திருந்தனர். மழை காரணமாக கடலில் சூரிய உதயம் இன்று தெரியவில்லை. இதனால் சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

error: Content is protected !!