News October 19, 2025
CPR, ராமதாஸ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இரு இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாள்களாக CM, EPS, விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய், சசிகலா உள்ளிட்ட முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
Similar News
News March 15, 2026
டெல்லியில் விஜய்யை சந்தித்தாரா த்ரிஷா?

கரூர் வழக்கு தொடர்பாக ஆஜராக விஜய் நேற்று டெல்லி சென்றார். அதற்கு முந்தைய நாளே மும்பை சென்ற த்ரிஷா, சில RSS, BJP பிரமுகர்களைச் சந்தித்து தவெக கூட்டணி தொடர்பாக பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு நேற்று டெல்லி சென்ற த்ரிஷா, விஜய்யிடம் கூட்டணி தகவலை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
News March 15, 2026
வெள்ளி விலை இந்த வாரம் ₹10,000 குறைந்தது!

வெள்ளி விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வார இறுதியில் கிலோவுக்கு ₹10,000 குறைந்து ₹2,80,000 ஆக உள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் உள்ளிட்ட காரணங்களால் மார்ச் முதல் வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளியின் விலை, சர்வதேச சந்தையிலும் 6% குறைந்து 1 அவுன்ஸ் 80 டாலராக உள்ளது. இது வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதால், முதலீடு செய்வோர் சற்று யோசித்து முடிவெடுங்கள்.
News March 15, 2026
விஜய்யை திசைதிருப்ப திமுக திட்டமா?

<<19382831>>லயோலாவின் IPDS<<>> நடத்திய கருத்துக்கணிப்பில் இளைஞர்கள் மத்தியில் திமுகவை, தவெக விஞ்சிவிட்டதாக முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம், அரசியல் களம் மட்டுமின்றி SM-ல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA-வுடன் விஜய் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதை திசைதிருப்பி தனித்து களம் காணும் ஆசையை மேம்படுத்தவே ‘இந்த திணிப்பை’ திமுக திட்டமிட்டு வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.


