News October 19, 2025
செங்கல்பட்டு: சொந்த ஊர் சென்றவர் பேருந்து மோதி பலி

சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த ஜீவிதா (22) ஒரகடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வந்தார். நேற்று (அக்.18) இவர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல தனது நண்பர் சுபாஷ் என்பவருடன் டூவீலரில் சென்றார். அப்போது மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதியதில் ஜீவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News March 7, 2026
செங்கல்பட்டு: இன்று என்ன பேச போகிறார் விஜய்?

செங்கல்பட்டு: மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தவெக சார்பில் இன்று நடைபெறும் மகளிர் தினவிழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். தனியார் நச்சத்திர ஓட்டலில் பிற்பகல் 3 மணிமுதல் 5 மணிவரை இந்த விழா நடைபெறுகிறது. இந்நிலையில், மகளிர் மத்தியில் தவெக தலைவர் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
News March 7, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று தனது பைக்கில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மோதி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த இளைஞருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.
News March 7, 2026
செங்கல்பட்டு அருகே பயங்கர விபத்து… கர்ப்பிணி உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்த்தில் அதிவேகமாக சென்ற கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாசுதேவன் மற்றும் நிறைமாத கர்ப்பிணி மோனிகா ஆகியோர் காயமடைந்தனர்.இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் கர்ப்பிணியான வாசுதேவன் மனைவி மோனிகா உயிரிழந்தார்.காரை ஓட்டிய விக்னேஸ்வரனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்


