News October 19, 2025
புதுச்சேரிக்கு மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இன்று(அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.
Similar News
News March 14, 2026
புதுச்சேரி: பிரபல ரவுடி கைது – நாட்டு வெடிகுண்டு பறிமுதல்

தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி எலி கார்த்தி உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் ஈ.சி.ஆர் சாலையில் காரில் செல்பவர்களை வழிமறித்து இவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
News March 14, 2026
மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை!

எதிர்வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.