News October 19, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.
Similar News
News October 20, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (அக்.19) இரவு முதல் இன்று (அக்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 19, 2025
திருவாரூர்: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

திருவாரூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 19, 2025
திருவாரூர்: கட்டாயம் தெரிய வேண்டிய உதவி எண்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் தேவைப்படும் அரசின் அவசர உதவி எண்களை அறிந்து கொள்வோம். 1. மாநில உதவி எண் – 1070, 2. மாவட்ட உதவி எண்- 1077, 3. அவசர மருத்துவ உதவி – 104, 4. விபத்து உதவி எண் : 108, 5. மின்வெட்டு -94987 94987 இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!