News April 17, 2024
கள்ளச்சந்தையில் சரக்கு.. கட்டுப்படுத்துமா பறக்கும்படை

மக்களவைத் தேர்தலையொட்டி இன்று முதல் வாக்குப்பதிவான ஏப்.19ஆம் தேதி வரை 3 நாளுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால் சிலர் நேற்று மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்க முயற்சி செய்கின்றனர். இதை தேர்தல் பறக்கும்படையினர் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News February 3, 2026
வெள்ளி விலை ஒரே நாளில் ₹20,000 குறைந்தது

3 நாள்களுக்கு பிறகு தங்கம் விலை உயர்ந்து ஷாக் கொடுத்தாலும், வெள்ளி விலை குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹20 குறைந்து ₹280-க்கும், 1 கிலோவுக்கு ₹20,000 குறைந்து ₹2.8 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களாக வெள்ளி விலை தொடர்ந்து இறங்கு முகத்திலே உள்ளது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
News February 3, 2026
ரோபோக்களுக்கு தனி உலகம் உருவாக்கப்பட்டிருக்கு

முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜெண்டுகளுக்காக மட்டுமே ‘மோல்ட்புக்’ (Moltbook) என்ற புதிய தளத்தை மேட் ஷ்லிச் என்பவர் உருவாக்கியுள்ளார். இங்கு மனிதர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, எந்த ஒரு பதிவையும் இடவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ அனுமதி கிடையாது. இதனால், சுதந்திரமாக செயல்படும் இந்த AI-க்கள் இதில் மனிதர்களைப் பற்றி ஜோக் அடிக்க செய்கின்றன. உங்கள் கருத்து?
News February 3, 2026
பதவிக்காக மகளை கால்வாயில் வீசி கொன்ற தந்தை!

மகாராஷ்டிரா ஊராட்சி தேர்தலில் போட்டியிட, 3 குழந்தைகளுக்கு தந்தையான பாண்டுரங்(28) ஆசைப்பட்டார். ஆனால், அம்மாநிலத்தில் 2 குழந்தைகள் உள்ளவர்களே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி தடையாக இருந்தது. இதனால், மகளை கொல்ல முடிவு செய்து, 90 கி.மீ பயணித்து தெலங்கானாவுக்கு வந்து, மகளை கால்வாயில் வீசி கொன்றுள்ளார். தற்போது கடத்தல், கொலை வழக்குகளின் கீழ் அவர் கைதாகியுள்ளார். பதவி ஆசை எவ்வளவு கொடூரமானது!


