News October 19, 2025
₹35,400 சம்பளம்; 2,570 பணியிடங்கள்; முந்துங்க!

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,570 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: Diploma, B.E, B.Tech. வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹35,400 முதல் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம் அக்.30 தொடங்கி நவ.30 உடன் முடிவடைகிறது. இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News October 19, 2025
தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறையா இவர்கள்?

MGR, சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என வெகுசிலரே ரசிகர்கள் மனதை கவர்ந்ததோடு, வணிக ரீதியாகவும் வெற்றி நாயகர்களாக கருதப்படுகிறார்கள். இந்த வரிசையில், தமிழ் சினிமாவில் தற்போது மணிகண்டன், கவின், ப்ரதீப் ரங்கநாதன், ஹரீஷ் கல்யாண், அசோக் செல்வன், துருவ் விக்ரம் ஆகியோர் களமிறங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் யார் தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறையாக மாறுவார்கள்?
News October 19, 2025
தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்

அன்புக்குரியவர்கள், நண்பர்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். *மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க கொண்டாடுவோம் இந்த பண்டிகையை.. தீபாவளி நல்வாழ்த்துகள். * அறியாமை இருள் நீங்கி அறிவுச் சுடரொளி எங்கும் பரவட்டும். *தீமைகள் ஒழிந்து நன்மை ததும்பட்டும்… இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
News October 19, 2025
BREAKING: 1 கிலோ ₹3,000 வரை உயர்ந்தது

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக 1 கிலோ மல்லிகை ₹3,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முல்லை ₹2,500, சாதிப்பூ ₹2,000, காக்கரட்டன் ₹1,500, அரளிப்பூ ₹400, பன்னீர் ரோஸ், சம்பங்கி ஆகியவை தலா ₹200 வரை விற்கப்படுகிறது. தீபாவளிக்கு பின் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நீங்க எவ்வளவுக்கு பூ வாங்குனீங்க?