News October 19, 2025
திருச்சி மாவட்டத்தில் 58.8 மி.மீ மழை பதிவு

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்.18) இரவு மழை பெய்தது. இதில் துறையூர் சட்டமன்றத் தொகுதி தென்பறநாடு பகுதியில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 58.8 மில்லி மீட்டரும், சராசரியாக 2.45 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 22, 2026
திருச்சி: மாதம் 30,000 சம்பாதிக்க மானியம்!

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!
News March 22, 2026
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 22, 2026
திருச்சி: கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – எஸ்பி

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


