News October 19, 2025
கள்ளக்குறிச்சி: 30,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள்<
Similar News
News October 19, 2025
திருநாவலூர் அருகே வாகன விபத்தில் முதியவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநாவலூர் அருகில் உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோலியனூர் – வளவனூர் இடையே முதியவர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கினார். இதில், அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 19, 2025
கள்ளக்குறிச்சி: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE
News October 19, 2025
கள்ளக்குறிச்சி: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
1) இந்தியன் ஆயில்: 18002333555
2) பாரத் பெட்ரோல்: 1800224344
3) HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!