News October 19, 2025

மில்லியன் கணக்கான உயிரை காப்பாத்திருக்கேன்: டிரம்ப்

image

ஒவ்வொருமுறை போரை நிறுத்தும்போதும் அடுத்த போரை நிறுத்தினால் நோபல் பரிசு தருவார்கள் என தன்னிடம் பலர் சொல்வதாக டிரம்ப் கூறியுள்ளார். இதுவரை 8 போரை நிறுத்தி, மில்லியன் கணக்கான உயிர்களைக் காத்திருக்கிறோம் என்ற அவர், ஆனால் தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், ஏதோ ஒரு பெண்ணுக்கு நோபல் பரிசு கொடுத்ததாகவும், அவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் அவர் அருமையானவர் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News March 16, 2026

கஞ்சா விற்பனையால் பாலியல் தாக்குதல்: அண்ணாமலை

image

திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில், TN முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் சேலம் கோரிமேட்டில் 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் 2 பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவத்தை அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளார். கஞ்சா விற்பனையில் பெரும்பாலும் திமுகவினரே ஈடுபடும் நிலையில் உடனடியாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார்.

News March 16, 2026

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

+2 பொதுத்தேர்வு முடிவுகளை மே 8-ம் தேதி வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. மார்ச் 26-ம் தேதியுடன் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைகின்றன. இதனையடுத்து, ஏப்.9-ம் தேதி முதல் ஏப்.20-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்றும் அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதேபோல், 11-ம் வகுப்புக்கான அரியர் தேர்வு முடிவுகளை மே 20-ம் தேதி வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளதாம். SHARE IT

News March 16, 2026

ரசகுல்லாவால் பறிபோன உயிர்!

image

ஜார்க்கண்டில் திருமண நிகழ்ச்சியில் உற்சாகமாக பேசி சிரித்து கொண்டிருந்த தருணத்தில், லலித் சிங்(41) ரசகுல்லாவை சாப்பிட்டுள்ளார். அது அவரது தொண்டையில் சிக்கி கொள்ள, மூச்சுவிட முடியாமல் துடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் ரசகுல்லாவை எடுக்க முயன்றும் பலனளிக்காத்தால், அவரை உடனே ஹாஸ்பிடலுக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால், மூச்சு குழாயை ரசகுல்லா அடைத்ததால், அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!