News October 19, 2025
புதுவை: வாய்க்காலில் விழுந்து முதியவர் பலி

நிரவியில் வாய்க்காலில் 60 வயது முதியவர் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அவர், நிரவி காமராஜர் நகர் ராமச்சந்திரன்(60), என்பதும் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 19, 2025
புதுச்சேரி: ரூ.29,735 சம்பளத்தில்..அரசு வேலை

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில், காலியாக உள்ள 600 Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Diploma, B.Sc. in Chemistry போதுமானது, சம்பளம் மாதம் ரூ.29,735 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.11.2025 தேதிக்குள் <
News October 19, 2025
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி உழவர்களை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், உழவர்கரை நகராட்சி பகுதிகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளது. சாலையோரம் கடை அமைத்து, பொதுமக்கள் பார்வையில் படுமாறு, ஆடு மற்றும் கோழிகளை அறுத்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது.
News October 19, 2025
புதுவையில் 17 கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

புதுவையில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வர்ய்ம் 17 சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி அசோக்குமார், துரைசாமி வைத்தியநாதன், தமிழ்செல்வம், நந்தினிதேவி, ஹேமலதா, ராஜேஸ்வரி, தமிழ்செல்வி, ரேவதி, ஆல்பர்ட்தாமஸ் ஜோசப், ராஜலட்சுமி, சரவணன்,
ஹென்றிதாமஸ், ராஜசேகர், ஜெயக்குமார், சித்ரா ரஞ்சன், அனில்குமார், திருகபிலன் ஆகியோர் மாற்றபட்டுள்ளனர். இந்த உத்தரவை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்