News October 19, 2025
புதுவை: ஜிப்மரில் மாணவர் சேர்க்கை!

புதுவை, ஜிப்மரில் பி.எஸ்சி நர்சிங், ஹெல்த் சயின்ஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. இதற்காக கடந்த செ.22 வரை விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில், தேர்வான மாணவர்கள் தர வரிசை பட்டியலில் 3037 பேர் இடம் பெற்றுள்ளனர். இதன் கலந்தாய்வு வரும் வருகிற அக்.28ம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு பின் மாணவர்கள் பட்டியல் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்படும்.
Similar News
News March 17, 2026
புதுச்சேரி: அமைச்சரின் அலுவலகத்திற்கு சீல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள எம்எல்ஏ-க்களின் அரசு அலுவலகங்கள் காலியாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அமைச்சர் ஜான் குமாரின் பதவி காலம் முடிவடைந்ததையொட்டி, புதுச்சேரி 45 அடி வள்ளலார் சாலையில் உள்ள அவரது அலுவலகம் நேற்று காலியாக்கப்பட்டு, அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
News March 17, 2026
புதுவை வேளாண் அதிகாரிக்கு பதவி உயர்வு

புதுச்சேரி வேளாண் துறையில் 29 ஆண்டுகளாக, வேளாண் பொறியியல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெயக்குமாருக்கு, வேளாண் பொறியியல் பிரிவின் துணை இயக்குனராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாநில நிலத்தடி நீர் பிரிவு மற்றும் மண்வள பாதுகாப்பு அலுவலகத்தில் துணை இயக்குனராக பதவி ஏற்றுள்ளார். இவருக்கு காரைக்கால் வேளாண் பொறியியல் துணை இயக்குனர் பதவியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
News March 17, 2026
புதுச்சேரி தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அதிரடி ஆய்வு

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத் தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான குலோத்துங்கன் பல்வேறு தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வேட்புமனு தாக்கலுக்கான படிவங்கள் போதுமான அளவில் உள்ளனவா, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்தார்.


