News October 19, 2025
பெரம்பலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 21, 2025
பெரம்பலூர்: மழையால் பாதிப்பா? உடனே அழையுங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News October 21, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
News October 21, 2025
பெரம்பலுர்: நாளை மின்தடை அறிவிப்பு

பெரம்பலுர், கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (22.10.2025) நடைபெற இருப்பதால், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், வெங்கலம், தழுதாழை, உடும்பியம், தொண்டப்பாடி, வெண்பாவூர், விசுவக்குடி, ஈச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் தகவல் தெரிவித்துள்ளார்.