News October 19, 2025

3 நாள்களில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

image

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களில் மட்டும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் 6,15,992 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News March 20, 2026

அதிமுக MP மீது விசாரணையை தொடங்கிய மகளிர் ஆணையம்

image

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய C.V.சண்முகம் மீது மாநில மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஊடங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் C.V.சண்முகம் MP என்பதால் நாடாளுமன்ற செயலரிடம் புகார் அளிக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க DGP-க்கு பரிந்துரைக்கவும் மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது.

News March 20, 2026

அடுத்த ரேஸில் களமிறங்கும் அஜித்!

image

க்ரெவெண்டிக் 24H சீரிஸ் ஐரோப்பிய தொடரில் இன்று அஜித் பங்கேற்க உள்ளார். Ajith RedAnt Racing என்ற பெயரில் களமிறங்கும் அவரது அணியில், அவருடன் இணைந்து கோபி டி பிரூக்கர், அய்ர்டன், யானிக் ஆகியோர் ரேஸில் கலக்க உள்ளனர். இந்த ரேஸில் அஜித் Mercedes-AMG GT3 EVO ரக காரைப் பயன்படுத்த உள்ளாராம். துபாய் தொடரில் கோப்பையை வெல்ல தவறியதால், இதில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் இருக்கிறாராம்.

News March 20, 2026

ஈரான் போருக்காக மேலும் ₹18 லட்சம் கோடியை இறைக்கும் US

image

ஈரானுடனான போரைத் தொடர்வதற்காக, பென்டகன் அமெரிக்க காங்கிரஸிடம் 200 பில்லியன் டாலர் (₹18 லட்சம் கோடி) கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஈரானியப் பொருளாதாரத்தின் (356 பில்லியன் டாலர்) பாதிக்கும் மேலாகும். போரின் முதல் வாரத்திலேயே அமெரிக்கா 11 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்டது. போருக்காக அமெரிக்கா அதிகப்படியாக செலவிடுவதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!