News October 19, 2025
கரூர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க!
Similar News
News October 21, 2025
கரூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கரூர் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)
News October 21, 2025
கரூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

கரூர்: நங்கவரம் அருகே நச்சலூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கால்பகுதியில் ஆபரேஷன் செய்து வலியால் துடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று(அக்.20) மன விரக்தியில் இருந்த மாணிக்கம் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News October 21, 2025
கரூர்: காவல்துறை எச்சரிக்கை!

கரூர் மாவட்டத்தில் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சட்டபூர்வமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதாக பொய்வாக்குறுதி வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் தகவல் அல்லது புகார் இருப்பின் 1800 599 0050 (அ) 100 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.