News October 19, 2025
கடலூர்: பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரத்தை சேர்ந்தவர் ராஜவேல் மகள் ராதிகா (35). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் ராதிகாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் திருமணம் செய்ய விருப்பம் இல்லாததால் ராதிகா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மங்கலம் பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 19, 2025
கடலூர்: அனுமதி இன்றி பட்டாசு விற்றவர் கைது

நடுவீரப்பட்டு பகுதியில் அரசின் அனுமதி இன்றி கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் இன்று (அக்.19) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் ரூ.10,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட பிரபாகரன் (54) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News October 19, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.
News October 19, 2025
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சிட்டா அடங்கல், வங்கி கணக்கு ஆதார் அட்டைகளை கொண்டு இ -சேவை மையம் வாயிலாக பயிர் காப்பீடு செய்யலாம். மக்காச்சோளத்துக்கு வருகின்ற 31-ம் தேதியும், சம்பா நெல், பருத்தி, உளுந்துக்கு நவம்பர் 15-ம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் லட்சுமி காந்தன் தெரிவித்துள்ளார்.