News October 19, 2025

புதுகை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

புதுகையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாணவி தஞ்சாவூரில் இருந்து தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு வாலிபர் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதையடுத்து திருச்சியை சேர்ந்த கஜேந்திரன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News March 4, 2026

புதுக்கோட்டையில் துணிகரம்: கோயிலில் உண்டியல் திருட்டு

image

ஆலங்குடி அடுத்த கல்லாலங்குடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது 3 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. இந்நிலையில் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 4, 2026

புதுகை: விருது பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

புதுகை மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருது வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வு குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி உள்ளிட்ட கலைஞரிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 18-65 வயது உடையோர் மார்ச் 30க்குள் உதவி இயக்குனர் கலை பண்பாட்டு மையம் ஸ்ரீரங்கம் திருச்சி-6 விண்ணப்பிக்க கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 3, 2026

புதுக்கோட்டை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

image

புதுக்கோட்டை மக்களே, <>இங்கு க்ளிக் செய்து <<>>தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!