News October 19, 2025
அரியலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், நவம்பர் மாதத்துக்குரிய அரிசி ஒதுக்கீட்டை அக்டோபர் மாதத்திலேயே பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அக்டோபர் மாதத்திற்குரிய அரிசியுடன் சேர்ந்து நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை பெற்றுக்கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 5 ரேஷன் கடைகள்!

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா இன்று (மார்ச்- 04) பொய்யாதநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதன்படி பொய்யாதநல்லூர், வெள்ளூர், சென்னிவனம், தேளூர், ஏழேரி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக நியாயவிலை கடைகள் திறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 4, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 முதல் நாளை (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 3, 2026
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட விவசாயிகள் மத்திய அரசின் E Nam திட்டத்தின் வாயிலாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விளைபொருள்கள் விற்பனை செய்வது எளிமைப்படுத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் ஆதார் கார்டு, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனை கூட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


