News April 17, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

image

அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஆண்டு திருவிழா ராம நவமி அன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறும். சுயம்பு கலியபெருமாள் சுவாமிக்கு இன்று பூஜைகள் நடைபெற்ற பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கருட கொடி ஏற்றப்பட்டது.

Similar News

News August 21, 2025

சைபர் குற்ற பாதுகாப்பிற்கான எளிய வழிமுறைகள் வெளியீடு

image

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் மோசடிகளை தவிர்க்க இரண்டு எளிய வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் அனைவரும் தங்களது கைபேசியில் தெரியாத இணைப்பை கிளிக் செய்யாதீர்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பகிராதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகாருக்கு 1930 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

அரியலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

அரியலூர்: இலவச காதொலிக் கருவி வழங்கல்

image

தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் இலவச காது கேட்கும் கருவிகளை பெறலாம். கடந்த 3 வருடங்களுக்குள் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றவர்கள் ஆதார், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முகாம் அரியலூர் மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!