News October 19, 2025

கிருஷ்ணகிரி: இளைஞர்களுக்கு.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

ஆதிதிராவிடர் வீட்டு வசதி & மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தலைசிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சைக்குத்துதல் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 8th முதல் 12th வரை படித்து, 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 15, 2026

‘அதிமுகவை பாஜக விழுங்கிவிடும்’ : உதயநிதி அதிரடி பேச்சு!

image

கிருஷ்ணகிரியில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுகவை பாஜக விழுங்கிவிடும்” என விமர்சித்தார். மேலும், நிர்வாகிகள் மக்களிடம் கண்ணியமாகப் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, பர்கூர் அருகே ஒப்பதவாடி கிராமத்தில் 100 அடி உயரக் கொடிக்கம்பத்தை அவர் நேற்று திறந்து வைத்து உரையாற்றினார்.

News March 15, 2026

கிருஷ்ணகிரியில் சோகம்: ரயில்வே ஊழியர் பரிதாப பலி

image

கிருஷ்ணகிரி நகரில் இரயில்வே காலனியை சேர்ந்த குப்புசாமி என்பவர் மார்ச்-2 அன்று ரவுண்டான சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 15, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை : இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!